சசிகலா தேர்தலில் போட்டியிடுவார்: டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

 

சசிகலா தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதனை அடுத்து அவர் தற்போது பெங்களூரில் தங்கி இருக்கும் நிலையில் விரைவில் அவர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா சென்னை வந்தவுடன் அதிமுகவில் சலசலப்பு ஏற்படும் என்றும் அதிமுகவை அவர் கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலான பிரமுகர்கள் அவருடைய ஆதரவாளர்களாக மாறுவார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dinakaran

இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் சசிகலா சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார் என்று கூறினார். மேலும் அதிமுக கட்சிக்கொடி பயன்படுத்துவதில் டிஜிபி மட்டுமல்ல முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதற்கு தான் டிடிவி தினகரன் இவ்வாறு கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web