ஜனவரியில் விடுதலையாகிறார் சசிகலா: பரபரப்பு தகவல் 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆவதாக பெங்களூர் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது 

இது குறித்து அதில் பெங்களூரு நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த கேள்விக்கு பதில் கூறிய பெங்களூர் சிறை நிர்வாகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் சசிகலா விடுதலை ஆகிறார் என்று தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையாக ரூபாய் 10 கோடியை அவர் செலுத்த வேண்டும் என்றும் ஒருவேளை அவர் பணத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு அவர் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் ஆர்டிஐ தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஜனவரியில் சசிகலா, பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என்ற செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் சசிகலா, விடுதலையாகி சென்னை திரும்பியதும் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்றும் அதிமுக இரண்டாக உடையும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

From around the web