தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா சசிகலா புஷ்பா? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் பாஜகவில் இணைந்த அதிமுகவின் எம்பி, சசிகலா புஷ்பாவிற்கு தமிழக பாஜக தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை அதிமுக ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார். அவரது இணைப்பால் பாஜக தமிழகத்தில் எப்படி வளரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர்
 
தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா சசிகலா புஷ்பா? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் பாஜகவில் இணைந்த அதிமுகவின் எம்பி, சசிகலா புஷ்பாவிற்கு தமிழக பாஜக தலைவர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை அதிமுக ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார். அவரது இணைப்பால் பாஜக தமிழகத்தில் எப்படி வளரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பாஜகவினர் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஏற்கனவே எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், எஸ்வி சேகர், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட சுமார் பத்துபேர் போட்டியில் இருக்கும் நிலையில் திடீரென அவர்கள் எல்லாம் முந்திக்கொண்டு நேற்று கட்சியில் சேர்ந்த சசிகலா புஷ்பாவுக்கு தமிழக பாஜக தலைவர் பதவி கொடுக்க இருப்பதாக வெளிவந்த செய்தியால் தமிழக பாஜக பிரமுகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

From around the web