நாளை சசிகலா டிஸ்சார்ஜ்: சென்னை வருவது எப்போது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற நிலையில் கடந்த 27ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலையானார்
இருப்பினும் அவருக்கு கொரோனா உள்பட ஒருசில பாதிப்பு இருந்ததை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்
கொரோனாவில் இருந்து அவர் குணம் அடைந்து விட்டாலும் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நாளை சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இருப்பினும் பெங்களூரில் அவர் ஒரு சில நாட்கள் தங்கியிருப்பார் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் ஒருசில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
எனவே அவர் பெங்களூரில் சிலநாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சென்னைக்கு வரும் பிப்ரவரி மாதம் 4 அல்லது 5ஆம் தேதி திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்க அமமுகவினர் தயாராகி வருகின்றனர் என்பதும் சசிகலாவின் வருகைக்கு பின்னர் அதிரடியாக அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது