ஒரே இடத்தில் இருவரும்: நேருக்கு நேர் சந்தித்து கொண்டார்களா சசிகலா-ஈபிஎஸ்?

 
sasikala and eps

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று ஒரே நேரத்தில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகை தந்த நிலையில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்களா என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனன் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அப்போது அவர் மருத்துவர்களிடம் மதுசூதனன் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்

அந்த சமயத்தில் மதுசூதனனை சந்திக்க சசிகலாவும் வருகை தந்தார். அதிமுக கொடி தாங்கிய காரில் அவர் வருகை தந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வந்து இருந்தாலும் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை என்பதும் சசிகலா வருகை தெரிந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறி தனது காரில் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது 

எடப்பாடி பழனிசாமி சென்றபின் சசிகலா அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளே சென்று அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web