சரத்குமார், ராதிகா போட்டியிடவில்லை: இதுக்கா ‘சித்தி’ சீரியலில் இருந்து விலகினிங்க?

 

அதிமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த சரத்குமாரின் கட்சி, சமீபத்தில் அந்த கூட்டணியில் இருந்து விலகியது என்பதும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் இணைந்தது என்பதும் தெரிந்தது. 

மேலும் கமல் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 

radhika

இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்த அவருடைய கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவருமே போட்டியிடுவதில்லை என்ற அறிவிப்பு தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். 

மேலும் 40 தொகுதிக்கு வேட்பாளர்கள் கிடைக்காததால் மூன்று தொகுதிகளை கமல்ஹாசனிடம் சரத்குமார் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் கூறப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முழுநேர அரசியலுக்காகத்தான் நடிகை ராதிகா ‘சித்தி’ சீரியலில் இருந்து விலகி வந்தார். ஆனால் தற்போது அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் ‘சித்தி’ சீரியலில் இருந்து ஏன் விலகி இருக்கணும் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

From around the web