தமிழகத்தில் ரேசன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அரசாணை வெளியீடு!

 

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது

இதன்படி காலமுறை ஊதியம் பெற்று வரும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் குறைந்தபட்சமாக 2556 ரூபாயும் அதிகபட்சமாக 4,000 ரூபாயும் சம்பள விகிதங்களில் கூடுதலாக பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

ration

அதேபோன்று கட்டுநர்கள் குறைந்தபட்சமாக 2337 ரூபாயும் அதிகபட்சமாக 3,500 ரூபாயும் பெறுவார்கள். மேலும் ஊதிய உயர்வு மூலம் 23 ஆயிரத்து 795 பேர் பயன் பெறுவார்கள் என்றும் 19 முதல் 24 சதவீதம் வரை கூடுதல் நிதி பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பை தொடர்ந்து மேலும் சில அதிரடி அறிவிப்புகள் தமிழக அரசிடம் இருந்து வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக அரசு பல அதிரடி அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவிப்பு பட்டியலில் தற்போது ரேஷன் கடை ஊழியர்களின் சம்பள உயர்வும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web