ரேசன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ரூ.2000. பொதுமக்கள் மகிழ்ச்சி

 
ஒரு ரூ.2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை: ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தகவல்

தமிழக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற தினத்தில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பதும் அதில் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றும் முதல் தவணையாக உடனடியாக ரூபாய் 2000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2000 சமீபத்தில் வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ரூபாய் 2000 வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று வழங்கப்படும் இந்த ரூபாய் இரண்டாயிரத்துக்கான டோக்கன் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ரூபாய் இரண்டாயிரம் மட்டுமின்றி 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையும் வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web