ரூ.1000 ஊக்கத்தொகை: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

 
stalin

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 1000 ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கோவில்களில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் நடந்த விழா ஒன்றில் அவர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பதும் திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூபாய் 1000 இனிமேல் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த திட்டத்தின் காரணமாக 13 ஆயிரம் அர்ச்சகர்களின் குடும்பங்கள் பயன் அடையும் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்

மேலும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறநிலை துறை அமைச்சராக சிறப்பாக செயல்படுகிறார் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார். முதல்வரின் இந்த திட்டத்திற்கு அர்ச்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web