காவல்துறையினர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு

 
police

தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் ஒவ்வொரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்று பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை அடுத்து பல்வேறு அறிவிப்புகளை அவர் அறிவித்தார் 

ரேஷன் கடைகளில் இரண்டாவது தவணையாக ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த நிலையில் தற்போது அதிரடியாக மேலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

இதன்படி தமிழகத்தில் உள்ள காவலர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5000 வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கோவிட்-19 காலத்திலும் அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிடும் காவல்துறையினருக்கு அரசின் சார்பில் என் அன்பின் நன்றியும் பாராட்டுகளும்! அவர்தம் பணியினை போற்றும் வகையில் இரண்டாம்நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

From around the web