இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு: மக்கள் உற்சாகம் 

 

பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூபாய் 2500 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. இதற்காக கடந்த சில நாட்களாக டோக்கன் வழங்கும் பணிகளிலும் ரேஷன் கடை ஊழியர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு ரூபாய் 2500 மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் தரப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ரூபாய் 2500 வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

pongal gift1

அதுமட்டுமின்றி பொங்கல் செய்வதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஒரு கரும்பு ஆகியவையும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் அரிசி  ரேஷன்கார்டு மக்களுக்கு தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் 

ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் இந்த பரிசைப் பெற வேண்டிய நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த நேரத்தில் பொதுமக்கள் சென்று ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

From around the web