கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினர் குடும்பத்திற்கு ரூ.25 கோடி: தமிழக அரசு அறிவிப்பு

 
stalin

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் சுமார் 300 பேர் தினமும் மரணமடைந்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒரு சில காவல்துறை அதிகாரிகளும் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்ப வாரிசுகளுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி உதவி என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில்‌ கோவிட்‌-19 நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும்‌ விதத்தில் அரசுத்‌ துறையை சார்ந்த அலுவலர்கள்‌ தீவிரப்‌ பணிபுரிந்து வருகிறார்கள்‌. இந்த பணியின்‌ மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள்‌ இன்னுயிரை இழந்திருக்கிறார்கள்‌. முக்கியமாக தமிழக காவல்‌ துறையில்‌ இதுவரை அதிகாரிகள்‌ மற்றும்‌ காவலர்கள்‌ உட்பட 84 நபர்கள்‌ தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள்‌.. இதுவரை தங்கள்‌ இன்னுயிரினை இழந்தவர்களின்‌ 13 நபர்களின்‌ குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம்‌ வீதம்‌ ரூ.3.25 கோடி நிவாரணத்‌ தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில்‌ 36 நபர்களுக்கான முன்மொழிவுகள்‌ பெறப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.25 லட்சம்‌ வீதம்‌ ரூ.9 கோடியினை நிவாரணத்‌ தொகையாக வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள்‌ பெறப்பட்டவுடன்‌ பரிசீலித்து அவர்களுக்கும்‌ தலா ரூ.25 லட்சம்‌ வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

police

From around the web