15 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1000: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

 
money

15 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் வரும் 23ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து தகுதி வாய்ந்த மக்களை அடையாளம் கண்டு 15 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 1000 பரிசு தொகை வழங்க கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் 147 கோடிக்குமேல் நிதிகளை ஒதுக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

சமூக பாதுகாப்பு மற்றும் நலநிதி ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு கேரள அரசு இந்த ஆயிரம் ரூபாய் ஆயிரம் நிதியை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை பரிசு தொகையாக இந்த அறிவிப்பு கேரள மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web