குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கனிமொழிக்கு நன்றி தெரிவித்த குடும்பங்கள்!

 
kanimozhi

கடந்த 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது போலீசாரால் தாக்குதலுக்கு உட்பட்ட 94 குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பி வந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு மற்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு நிதி உதவி கடந்த அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீசார் தாக்குதலுக்கு உள்ளான 94 குடும்பங்களுக்கு நிதியுதவி குறித்த அறிவிப்பை சமீபத்தில் பதவியேற்ற திமுக அரசு வெளியிட்டது 
தூத்துக்குடி போராட்டத்தின்போது போலீஸாரின் தாக்குதலுக்குள்ளான 94 குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து இன்று அந்த நிதி உதவியை தூத்துக்குடி எம்பி கனிமொழி வழங்கினார் 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 94 குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து கனிமொழி ரூபாய் ஒரு லட்ச ரூபாய் வழங்கினார் என்பதும், இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி எம்பி கனிமொழிக்கு தங்களது நன்றியினை 94 குடும்பத்தினர்களும் தெரிவித்துக் கொண்டனர்

From around the web