சென்னையில் மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

 
petrol

தமிழகத்தில் கிட்டத்தட்ட தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக மத்திய மாநில அரசுகள் விளக்கம் கொடுத்த போதிலும் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகள் காரணமாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்து உள்ளது என்ற செய்தி பெரும் பொதுமக்களுக்கு பேரிடியாக உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து உள்ளது எடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.92 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. ஆனால் நுகர்வோர்களிடம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 102 ரூபாய்தான் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் டீசல் விலை இன்று 15 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web