நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டமன்றத்தில் தீர்மானம்

 
neet

தமிழக சட்டமன்றத்தில் இன்று நீட் தேர்வு எதிராக தீர்மானம் இயற்றப்பட்ட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் உறுதி செய்துள்ளார்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில் இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்ட உள்ளது. இந்த தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
ஆனால் அதே நேரத்தில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஒரு சட்டத்தை எதிர்த்து ஒரு மாநிலம் மட்டுமே இயற்றும் தீர்மானம் எந்த அளவுக்கு ஏற்று கொள்ளப்படும் என்றும் குடியரசுத் தலைவர் இதனை ஒப்புக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது 

குறைந்தது இரண்டு மாநிலங்கள் ஒரு சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அனுப்பினால் மட்டுமே குடியரசுத்தலைவர் பரிசீலனை செய்வார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இந்த தீர்மானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web