இன்று சட்டமன்றத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம்?

 
assembly

மத்திய அரசு சமீபத்தில் சிஏஏ என்றால் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நாடு முழுவதும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் பொது மக்களும் அரசியல்வாதிகளும் இந்த சட்டம் குறித்த தகவலை மறந்துவிட்டனர் 

இந்த நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்ற பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த தீர்மானத்தை இயற்ற இருப்பதாகவும் இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

ஏற்கனவே மத்திய அரசு பிறப்பித்த மூன்று வேளாண்மை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதனை அடுத்து தற்போது சிஐஏ சட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் இயற்றப்பட்ட உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web