நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் கடந்த சில நாட்களாக நேரு ஸ்டேடியத்திலும் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து தற்போது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து நேரு ஸ்டேடியத்தில் விற்கப்பட்டு வந்த நிலையில் அங்கு கூட்டம் அலைமோதியது

ரெம்டெசிவிர் மருந்து வாங்க நூற்றுக்கணக்கானோர் தனிமனித இடைவெளியின்றி மாஸ்க் அணியாமல் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று தமிழக அரசு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து தற்போது நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

chennai corporation

From around the web