தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் ரெம்டெசிவிர்: ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

 
தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் ரெம்டெசிவிர்: ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் என்று கூறப்படும் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நூற்றுக்கணக்கில் நோயாளிகளின் உறவினர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது . ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் தற்போது ஆன்லைன் மூலமே சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் மருந்து அனுப்பப்படும் என்றும் ரெம்டெசிவிர் மருந்துக்காக யாரும் நேரு ஸ்டேடியத்தில் வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தனியார்  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ucc.uhcitp.in/form/drugs என்ற இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

remdesivir

இந்த இணையதளத்தில் கொரோனா நோயாளியின் பெயர் வயது அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தமிழக அரசால் ரெம்டெசிவிர் மருந்து அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மருந்துக்காக இனி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web