தொழில்நுட்பக் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

 
neet result3

தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு நடந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பர் 2020, ஜனவரி 2021 மற்றும் பிப்ரவரி 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தா் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2,28,441 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 2,09,338 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் 18,529 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றும் 574 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தங்கள்  தேர்வு முடிவுகளை அறியலாம் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் தேர்வில் பங்கேற்கலாம் . தேர்வுக்கான கட்டணத்தை ஜூன் 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். 2,4,6 வது செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள், ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் , ஜூலை 14 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் விறுவிறுப்பாக தங்களது தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web