ஊரடங்கில் தளர்வுகள்: தமிழக அரசின் அறிவிப்பு!

 
lockdown

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்பட்டது என்பதும் ஜூன் 7 முதல் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ள இந்த ஊரடங்கில் தளர்வுகள் சில அறிவிக்கப்பட்டன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து பார்ப்போம். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் அங்கு முழு ஊரடங்கு தொடரும் என்றும் பிற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் மேற்கண்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் 

அதேபோல் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் மீன் சந்தை, இறைச்சி கூடங்கள் விற்பனை செய்ய அனுமதி உண்டு அனைத்து அரசு அலுவலர்களும் 30% பணியாளர்களுடன் செயல் படலாம் என்றும் எலக்ட்ரிகல் ஹார்ட்வேர் கடைகள் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் 5 மணி வரை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது

மேலும் வாடகை கார்களில் மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் இரண்டு பயணிகளும் செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

From around the web