ஊரடங்கில் தளர்வுகள்: விரைவில் முக்கிய அறிவிப்பு

 
lockdown

தமிழகத்தில் விரைவில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த முக்கிய அறிவிப்பு தமிழக அரசிடமிருந்து விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டு வருகிறது 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருப்பதால் அத்தியாவசியமான பொருட்கள் வாங்க மக்கள் திண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறைவான பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தவும் அத்தியாவசியமான கடைகளை திறக்க அனுமதிக்கவும் தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் சென்னை கோவை ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் இந்த மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடரும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web