சிம்பு மீதான ரெட்கார்டு நீக்கம்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

 
Simbu-Stills-From-Vaalu-Movie-28

சிம்பு மீதான ரெட்கார்டு நீக்கப்பட்டதை அடுத்து பெப்சி சங்கம் உள்பட அனைத்து சங்கங்களும் சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது 

நடிகர் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும் அவரால் அவரது ஒத்துழைப்பின்மையால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்றும் புகார்கள் குவிந்தது

மேலும் இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில் நடிப்பதற்காக சிம்பு முன்பணம் வாங்கி இருந்ததாகவும், அந்த பணத்தை திருப்பித் தராமல் நடிக்கவும் செய்யாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது 

இந்த நிலையில் சிம்பு மீது பல்வேறு புகார்கள் வந்ததை அடுத்து அவரது படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சிம்பு விவகாரத்தை சுமூகமாக முடிக்க பல கட்டமாக நடந்த பேச்சுவார்த்தைகள் தற்போது உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து சிம்புவுக்கு வழங்கப்பட்டு இருந்த ரெட்கார்டு தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிம்பு திரைப்படத்தில் பெப்சி அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து சங்கங்களும் பணிபுரியலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது

From around the web