கணக்கு காட்ட தயாரா? கமலிடம் சவால் விட்ட தமிழக அமைச்சர்!

 

கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து ஒவ்வொரு மேடையிலும் பேசி வரும் கமல்ஹாசனிடம் தான் சொத்துக் கணக்கை காட்ட தயாராக இருப்பதாகவும் அதே போல் கமல்ஹாசன் காட்ட தயாராக உள்ளாரா என்று சவால் விட்டுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ 

kadambur raju

இன்று செய்தியாளர்களை கோவில்பட்டியில் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு ’எனது சொத்து தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயார். கமல் மனசாட்சிப்படி தான் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தனக்கு சொல்ல தயாரா என்று சவால் விட்டுள்ளார் 

மேலும் எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு சீமானுக்கு தகுதி இல்லை என்றும் தரத்துடன் பேசினால் அவர்களுக்கு பதில் கூறலாம் என்றும், நாட்டில் நடக்கிறது எல்லாம் ரகளை செய்ததற்காக வாய்க்கு வந்தபடி பேசும் சீமான் போன்றவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை என்றும் கூறினார்.

எம்ஜிஆரை மக்கள் தெய்வமாக வழிபடும் நிறுவப்பட்டு வரும் நிலையில் எம்ஜிஆர் என்ன நல்லாட்சியை கொடுத்தார் என்று கேட்கும் சீமானின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

From around the web