234 தொகுதியிலும் போட்டியிட தயார், பாமக இல்லாத கூட்டணி தான்; பிரேமலதா அதிரடி

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாமக, தேமுதிக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என்றும் கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

premalatha

மேலும் கூட்டணியில் உரிய மதிப்பு அளிக்காவிட்டால் தனித்துப் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தேர்தல் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் அவர் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருந்தாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதே கூட்டணியில் நீடிக்குமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இதுவரை அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேமுதிக மறைமுகமாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் திமுக தேமுதிகவை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. வரும் தேர்தலில் தேமுதிகவின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

From around the web