தமிழகத்தில் ரேசன் கடைகள் திறக்கும் நேரம் மாற்றம்!

 
ரேசன் கடை, ஊழியர்கள், சம்பள உயர்வு, ration store, staffs, salary hike

நாளை முதல் அதாவது 08.06.2021 முதல் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நியாக விலை கடைகள் காலை 09:00 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும் , பிற்பகல் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நேரம் மறுஉத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவதுள் ஜூலை 14 வரை தளங்களுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள் மளிகை கடைகள் மற்றும் இன்றியமையா பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது

இந்தச் சூழலில் நியாயவிலை கடைகள் ஜூன் 8 முதல் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாயவிலை கடைகள் செயல்படும். இந்த நேரம் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்

மேலும் நிவாரணம் இரண்டாம் தவணைத் தொகை ரூபாய் 2000 மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பு அகியவை ஜூன் 15 முதல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பெற்றுச் செல்ல ஏதுவாக ஜூன் 11 முதல் 14 வரை கடை பணியாளர்கள் பிற்பகல் நேரங்களில் அவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

From around the web