வேகமாக பரவும் கருப்பு பூஞ்சை நோய்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

 
black fungu

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு கடந்த சில வாரங்களாக கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்திய அளவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பரவியிருக்கும் கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்திலும் பரவி உள்ளது என்பதும் தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேருக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த 17 பேருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துணை இயக்குனர் தெரிவித்துள்ளார் 

கடந்த 17ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை 42 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கு கண் மருத்துவம் காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் மிக வேகமாக தற்போது கருப்பு பூஞ்சை நோய் பாதித்து வருவதை அடுத்து அந்த நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web