பொறியியல் படிப்புக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு!

 
engineering

பொறியியல் படிப்புக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியாகும் என்ற செய்தி வெளிவந்துள்ளதை அடுத்து பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்த மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் பி,ஈ, பிடெக் படிக்க விண்ணப்பம் செய்து உள்ள மாணவர்களுக்கு 17-ஆம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

முதல்கட்ட கவுன்சலிங் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கு நடத்தப்படும் என்றும் இந்த கவுன்சிலிங் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

இதனையடுத்து பொதுப்பிரிவு கவுன்சிலிங் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதன்பின்னர் துணை கலந்தாய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்றும் அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.

From around the web