மின்னஞ்சல் மூலம் மெமோ அனுப்பிய ரஜினிகாந்த்: தள்ளுபடி செய்த நீதிபதி!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வரி விதிப்பை பாதியாக குறைக்கும் படி நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி அனிதா கடுமையாக கண்டனம் தெரிவித்தார். மாநகராட்சியிடம் செப்டம்பர் 29ஆம் தேதி கடிதம் அனுப்பி விட்டு ஒரு வாரத்திலேயே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவகாசம் கொடுத்த வேண்டாமா என்று கேள்வி எழுப்பினார் 

மேலும் இந்த வழக்கை கடுமையாக அபராதம் விதித்து தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தார். இதனை அடுத்து ரஜினி தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறியதை அடுத்து அதற்கான மெயிலும் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார் 

இதனை அடுத்து ரஜினி தரப்பிலிருந்து சற்றுமுன் மின்னஞ்சல் மூலம் மெமோ அனுப்பப்பட்டதாகவும், அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web