ரஜினி மக்கள் மன்றம் குறித்து ஜூலை 12ல் அதிரடி அறிவிப்பா?

 
rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். அவரது உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த், உடல்நிலை பரிசோதனை செய்து முடித்துவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். இந்த நிலையில் தற்போது ஜூலை 12ஆம் தேதி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரவேண்டும் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவடைந்த நிலையில் இப்போதைக்கு வேறு தேர்தலும் இல்லாத நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன ஆலோசனை நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web