டிஸ்சார்ஜ் ஆனார் ரஜினிகாந்த்: சென்னையில் ஒருவாரம் முழு ஓய்வு!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று மாலை ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் 

இதனையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றதாகவும் அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ரஜினிகாந்த் செய்யப்பட்டாலும் ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவரது இரத்த அழுத்த பரிசோதனை அவ்வப்போது பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

rajinikanth

மேலும் சில நாட்கள் அவர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முழு கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் எந்தவிதமான மன அழுத்தம் தரும் செயலிலும் ஈடுபட கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவர்களின் இந்த அறிவுறுத்தல் காரணமாக அரசியல் அறிவிப்பு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஆன்லைன் மூலமே தனது அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அரசியல் கட்சி தொடங்கும் தேதியையும் அவர் வெளியிடுவாரஎன்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web