மாணிக்கமாக இருக்கும் ரஜினி, மாணிக் பாட்ஷாவாக மாறுவார்: கராத்தே தியாகராஜன்

 

மக்களின் மனதில் மாணிக்கமாக இருக்கும் ரஜினிகாந்த் விரைவில் மாணிக் பாட்ஷாவாக மாறுவார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 31ஆம் தேதி அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது மருத்துவமனையில் இருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்றும் அதன் பின்னர் அவர் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

rajinikanth

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் காங்கிரஸ் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

தற்போது மக்களின் மனதில் மாணிக்கமாக இருக்கும் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி சில அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக மாணிக் பாட்ஷா பெறுவார் என்று தெரிவித்துள்ளார். கராத்தே தியாகராஜனின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web