ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய்க்கு அந்த எண்ணமே வரக்கூடாது: சீமான்

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஒரு சில அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகராக இருந்த சீமானே அதை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து அதன்பின் தனிக்கட்சி ஆரம்பித்து தற்போது அரசியல்வாதியாக மாறி இருக்கும் சீமான், ரஜினி கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மட்டும் அதை எதிர்த்து வருகிறார்
நடிகர் என்ற தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அரசியலுக்கு வரக்கூடாது என்று அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சீமான் அளித்த பேட்டியில் ரஜினி கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்
நடிப்பது மட்டுமே அரசியலுக்கு வருவதற்கான தகுதி என்பதை அவர்கள் மறந்து விட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகராக இருந்து அந்த பிரபலத்தின் காரணமாகவே அரசியலுக்கு வந்த சீமான் இதைச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் அவருடைய இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்