ரஜினிக்கு 3வது முறையாக சம்மன்: இம்முறையாவது ஆஜராவாரா?

 
ரஜினிக்கு 3வது முறையாக சம்மன்: இம்முறையாவது ஆஜராவாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையத்திடம் இருந்து மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறையாவது அவர் ஆஜராவாராவா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது ’இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான சமூக விரோதிகள் யார் என தனக்கு தெரியும்’ என்று கூறியிருந்தார் 

rajini

இதனை அடுத்து அந்த சமூக விரோதிகள் யார் என்பதை விசாரணை ஆணையத்தின் முன் தெரிவிக்குமாறு விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது. முதலில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்றும், எழுத்து மூலமாக கேள்வி கேட்டால் அதற்கு பதில் அளிக்க தயார் என்றும் ரஜினி தரப்பில் இருந்து கூறப்பட்டது.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டபோதிலும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனுக்கு அவர் ஆஜராவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web