ரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டுக்குள் அரசியல் கட்சியை ஆரம்பித்து அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பக்கம் அதிமுக பலமான கூட்டணியும், திமுக பிரசாந்த் கிசோருடன் இணைந்து தேர்தலை சந்திக்க களமிறங்க உள்ளது. இதனை அடுத்து ரஜினியின் ஆதரவாளரான ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ரஜினி அமைக்க உள்ள கூட்டணி குறித்து கூறிய போது ‘ரஜினி இந்த தேர்தலில் அமைக்கும் கூட்டணியை பார்த்து பிரசாந்த் கிஷோர்
 
ரஜினி கூட்டணி முன் பிரசாந்த் கிஷோர் நிச்சயம் திணறுவார்: ரவீந்திரன் துரைசாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆண்டுக்குள் அரசியல் கட்சியை ஆரம்பித்து அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் அதிமுக பலமான கூட்டணியும், திமுக பிரசாந்த் கிசோருடன் இணைந்து தேர்தலை சந்திக்க களமிறங்க உள்ளது.

இதனை அடுத்து ரஜினியின் ஆதரவாளரான ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ரஜினி அமைக்க உள்ள கூட்டணி குறித்து கூறிய போது ‘ரஜினி இந்த தேர்தலில் அமைக்கும் கூட்டணியை பார்த்து பிரசாந்த் கிஷோர் மற்றும் முக ஸ்டாலின் ஆகியோர் அதிர்ச்சி அடையும் அளவில் இருக்கும்.அவர் மிக பிரமாதமாக ஜெயலலிதாவை விட பத்து மடங்கு திட்டமிட்டு வருகிறார். அவருடைய திட்டம் மிகத் தெளிவானது. அதுமட்டுமின்றி யாரும் எதிர்பாராத ஒரு கூட்டணியை அவர் அமைப்பார் அந்த கூட்டணியை பார்த்து பிரசாந்த் கிஷோர் திணறும் அளவிற்கு இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

ரஜினி அப்படி என்னதான் கூட்டணி அமைப்பது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From around the web