ரஜினி பட நடிகைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, கழுகு உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நடிகை சுமலதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகை சுமலதா கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதி எம்பி என்பதும், மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் சோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதி
 
ரஜினி பட நடிகைக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை, கழுகு உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்த நடிகை சுமலதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை சுமலதா கர்நாடக மாநிலத்தில் மாண்டியா தொகுதி எம்பி என்பதும், மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷ் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது

நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் சோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனை அடுத்து அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இதுகுறித்து சுமலதா கூறியதாவது: “அன்பு நண்பர்களே கடந்த இரண்டு நாட்களுக்கு எனக்கு லேசான தலைவலி, தொண்டை எரிச்சலுக்கான அறிகுறிகள் இருந்தன.

எனது தொகுதிக்கான கடமைகளில் ஈடுபட்டிருக்கும்போது எனக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால் நான் பரிசோதனை செய்துகொள்ள முடிவெடுத்தேன். இன்று முடிவுகள் வந்துள்ளன. எனக்குத் தொற்று உள்ளது. மிக லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே நான் வீட்டுத் தனிமையில் உள்ளேன். என் மருத்துவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். கடவுளின் கருணையால், எனது நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது. உங்கள் ஆதரவுடன் நான் இதைக் கடந்து வருவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நான் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்திருப்பேன் என்ற பெயர்களை அரசு அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறேன். அதே நேரம், என்னுடன் தொடர்பில் இருந்தவர்களை நான் கேட்டுக்கொள்வது, உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்பதுதான். கோவிட்டுக்கு எதிரான இந்தப் போரில் வெல்வோம் வாருங்கள்”.

இவ்வாறு சுமலதா தெரிவித்துள்ளார்

From around the web