சாரி. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்

துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் இதுகுறித்து அவர் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: சேலத்தில் 1971-ம் ஆண்டு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் அந்த சம்பவம் செய்தியாக வெளியாகி உள்ளது. சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமன், சீதை, லெட்சுமணன் சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ, கற்பனையாகவோ நான்
 

சாரி. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்

துக்ளக் ஆண்டுவிழாவில் ரஜினி பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில் இதுகுறித்து அவர் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

சேலத்தில் 1971-ம் ஆண்டு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். அவுட்லுக் உள்ளிட்ட பத்திரிகைகளில் அந்த சம்பவம் செய்தியாக வெளியாகி உள்ளது. சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் ராமன், சீதை, லெட்சுமணன் சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து எடுத்து செல்லப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

இல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ, கற்பனையாகவோ நான் சொல்லவில்லை. அப்போது தர்ணா செய்ததை லட்சுமணன் இந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். நான் நடக்காத ஒன்றை சொன்னதாக சர்ச்சையாகி வருகிறது. நான் கேள்விப்பட்டதையும், செய்தியாக வெளியானதையும் வைத்துதான் பேசினேன்.

இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும், வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சாரி. என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்’ என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

From around the web