குமரியில் தணிந்தது மழை: அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் நிறுத்தம்

 
kumari rain

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்ந்ததை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதி வெள்ளக் காடாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் மழை வெள்ளம் தற்போது வடிந்து வருவதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்

மேலும் குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. மேலும் நீர் அணையின் நீர் முழு கொள்ளளவு எட்டியதை அடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

இந்த நிலையில் தற்போது மழை நின்று, நீர்வரத்து குறைந்ததுள்ளதை அடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து அணைகள் முழுமையான கொள்ளளவில் இருப்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web