சென்னையில் விடிய விடிய மழை: இன்றும் மழை தொடரும் என தகவல்!

 
rain

சென்னையின் பல பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை பெய்ததை அடுத்து இன்றும் மழை தொடரும் என செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, மயிலாப்பூர், எழும்பூர் உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் சென்னை நகரமே குளிர்ச்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் இன்று பகலிலும் இரவிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதால் சென்னை மக்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் ஒருசில நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் அதே போல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது


 

From around the web