அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்?

 
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் காரணமாக மிகுந்த வெப்பம் உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதியில் உள்ளனர் என்பதும் இரவு நேரத்தில் வெப்பம் காரணமாக பலர் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் மழை பெய்தால் நல்லது என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது. குறிப்பாக தேனி திண்டுக்கல் கோவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

rain

சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என கூறிய 15 மாவட்டங்களில் இதோ: கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், கரூர், தர்மபுரி இந்த பட்டியலில் சென்னை இல்லாதது சென்னை மக்களுக்கு வருத்தமே.

From around the web