தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 
rain

கிட்டத்தட்ட ஒரு மாதமாக பொதுமக்களை வாட்டி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் பரவலான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் கடலோர பகுதியில் உள்ள மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் அடுத்த இரண்டு நாட்களுக்கு மதுரை, திருச்சி, சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 

From around the web