ராகுல்காந்தி-உதயநிதி சந்திப்பு: ஜல்லிக்கட்டு குறித்து விளக்கமளித்தார் 

 

 காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று மதுரை அவனியாபுரத்தில் நடைபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வந்தார் என்பதும் அவர் போட்டியை ரசித்து பார்த்தார் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் உதயநிதியையும் சந்தித்தார். உதயநிதி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஜல்லிக்கட்டு குறித்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சில சந்தேகங்களை ராகுல்காந்தி கேட்க அதற்கு உதயநிதி விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது 

rahul udhay

மேலும் ராகுல் காந்தி மற்றும் உதயநிதி இணைந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த சந்திப்பின் போது இருவரும் அரசியல் குறித்து பேசியதாகவும் தெரிகிறது வருகிறது

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது குறித்து ராகுல் காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது 

பொங்கல் திருவிழாவை மனதில் வைத்து தமிழகம் வருகை தந்த ராகுல் காந்தி அரசியல் ஆலோசனைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web