ஒரே நாளில் தமிழகம் வரும் ராகுல்காந்தி, ஜேபி நட்டா!

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய தலைவர்களும் தமிழகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர் 

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமித்ஷா சென்னை வந்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ராகுல் காந்தி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகிய இருவரும் ஒரே நாளில் தமிழகத்திற்கு வர இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

jp nadda

ஜனவரி 14ஆம் தேதி  பொங்கல் தினத்தில் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் பிரமுகர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார். இதனை அடுத்து அவர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் வரும் தேர்தலை சந்திப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற வேண்டிய தொகுதிகள் குறித்தும் ஆலோசிப்பார் என்று தெரிகிறது 

அதேபோல் அதே நாளில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களும் சென்னைக்கு வருகை தருகிறார். பாஜக தமிழக தலைவர்களுடன் தேர்தலை சந்திப்பது குறித்து ஜேபி நட்டா ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருப்பதாகவும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web