காப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு கொரோனா; ராகவா லாரன்ஸ் அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது என்பது தெரிந்ததே ஆனால் ஒரு சில நாட்களில் அந்த குழந்தைகள் கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் காப்பகத்துக்கு திரும்பியதை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார் இந்த நிலையில் சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகம்
 

காப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு கொரோனா; ராகவா லாரன்ஸ் அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது என்பது தெரிந்ததே

ஆனால் ஒரு சில நாட்களில் அந்த குழந்தைகள் கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் காப்பகத்துக்கு திரும்பியதை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் சென்னையில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள ராயபுரத்தில் உள்ள அரசு காப்பகம் ஒன்றில் 42 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

அந்த குழந்தைகள் விரைவில் குணமாகி காப்பகம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாகவும் அந்த குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை தான் செய்து வருவதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

From around the web