ரேஷன் பொருட்களின் தரம்: பதிவாளரின் சுற்றறிக்கை

 
ration

தமிழக ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களின் தரம் குறித்து கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின்படி ஆய்வாளர்கள் சரியாக ரேஷன் பொருட்களை தரம் குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் காலாவதியான பொருள்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அதற்கு ஆய்வாளர்கள் தான் பொறுப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்‌ தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும்‌ வகையிலும்‌, பெருந்தொற்று நேரத்தில்‌ பொதுமக்களின்‌ வாழ்வாதாரத்திற்கு உதவும்‌ வகையிலும்‌ கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000/- மற்றும்‌. 14 பொருட்கள்‌ அடங்கிய மளிகைப்பொருட்களின்‌ தொகுப்பு ஆகியவற்றை 15.06.2021 முதல்‌ அனைத்து நியாயவிலைக்‌ கடைகள்‌ மூலம்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்‌ பார்வையில்‌ காணும்‌ பத்திரிக்கைச்‌ செய்தியில்‌ திருவள்ளூர்‌ மண்டலத்தில்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட 14 பொருட்கள்‌ அடங்கிய மளிகைப்பொருட்களின்‌ தொகுப்பில்‌ காலாவதியான டீ தூள்‌ பாக்கெட்டுகள்‌ இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரிக்கப்பட்டதில்‌, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க 14 மளிகைப்‌ பொருட்களை பைகளில்‌ வைக்கும்போது, தற்போது பெறப்பட்ட டீ தூள்‌ பாக்கெட்டுகளுக்கு பதிலாக, தவறுதலாக  நியாயவிலைக்கடையில்‌ ஏற்கனவே இருப்பிலிருந்த டீ தூள்‌ பாக்கெட்டுகள்‌ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதிலிருந்து காலாவதியான டீ தூள்‌ பாக்கெட்டுகள்‌ உரிய நேரத்தில்‌ அகற்றப்படாமல்‌
தொடர்ந்து நியாய விலைக்கடைகளிலேயே வைக்கப்பட்டிருந்தது தெரியவருகிறது.

மேற்குறிப்பிட்ட நியாயவிலைக்கடையினை ஆய்வு மேற்கொண்ட ஆய்வு அலுவலர்‌ நியாயவிலைக்கடையில்‌ ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த காலாவதியான டீ தூள்‌ பாக்கெட்டுகளை ஆய்வின்‌ போது சரிபார்த்து திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பின்‌ இது-போண்ற தவறுகள்‌ நிகழ்ந்திருக்காது.


இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web