தமிழகத்தில் தனியார் ரயில்: ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!

 
railway

இதுவரை ரயில்வே துறை தனியாரிடம் இல்லாத நிலையில் தற்போது சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு தனியார் ரயில் விட ஒப்பந்தம் கோரப் போவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சென்னையிலிருந்து மதுரை உள்பட பல்வேறு நகரங்களுக்கு தனியார் ரயில் இயக்கப் போவதாகவும் இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் 

குறிப்பாக சென்னையை மையமாக வைத்து மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், மற்றும் டெல்லி  ஆகிய 11 வழித்தடங்களில் தனியார் ரயில் சேவை அனுமதி கொடுக்கப் போவதாகவும் இதற்காக 3226 கோடி ரூபாய் திட்ட மதிப்பு போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தென்மாவட்டங்களுக்கு தாம்பரத்தை ரயில் நிலையமாக மாற்றவும், தனியார் ரயில் பராமரிப்பு பணியிடமாக தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

From around the web