பிரதமர் மன்மோகன்சிங்கா? அதிமுக எம்.எல்.ஏ பேச்சுக்கு நெட்டிசன்கள் கிண்டல்!

 

அதிமுக கூட்டம் ஒன்றில் பிரதமர் மன்மோகன்சிங் என அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திமுகவுக்கு எதிராக ராயப்பேட்டை அருகே அதிமுக போராட்டம் செய்தது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வரும் வரை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பாடல்களுக்கு நாடக நடிகர்கள் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

அதன்பின்னர் கூட்டத்தில் பேச வந்த அதிமுக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், ‘எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பாராட்டி இருக்கிறார் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது இதனால் அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது 

manmohansingh

கொரோனாவுக்கு ஒரு மாவட்டத்தில் கூட உயிர் இழப்பு கூடாது என அரசு அதிகாரிகளை வைத்து கொரோனாவை விரட்டியவர் இந்தியாவிலேயே எடப்பாடி பழனிச்சாமி ஒருவர்தான் என பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளார் என்று சம்பத் கூறினார்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்து அதன்பின்னர் நரேந்திரமோடி பிரதமர் பதவியேற்று ஆறு ஆண்டுகள் மேல் ஆகியும் இன்னும் பிரதமர், மன்மோகன் சிங் தான் என்று அதிமுக எம்எல்ஏ பேசுவது நகைப்புக்குரியது என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்

From around the web