2021ல் தேமுதிக ஆட்சி அமைக்கும்: பிரேமலதாவின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கிண்டல்!

2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று சொல்லாத கட்சிகளே இல்லை என்று சொல்லலாம் ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் அடுத்தது நமது ஆட்சி தான் என்ற நம்பிக்கையுடன் உள்ளன. இதனை அடுத்து திடீரென சமீபத்தில் பாமகவும் 2021ல் தங்கள் ஆட்சிதான் என்று கூறியது. ரஜினியும் ஆன்மீக அரசியல் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருகிறார் 2021ல் எங்கள்
 
2021ல் தேமுதிக ஆட்சி அமைக்கும்: பிரேமலதாவின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கிண்டல்!

2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று சொல்லாத கட்சிகளே இல்லை என்று சொல்லலாம்

ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் அடுத்தது நமது ஆட்சி தான் என்ற நம்பிக்கையுடன் உள்ளன. இதனை அடுத்து திடீரென சமீபத்தில் பாமகவும் 2021ல் தங்கள் ஆட்சிதான் என்று கூறியது. ரஜினியும் ஆன்மீக அரசியல் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருகிறார்

2021ல் எங்கள் ஆட்சிதான் என்று கமல் அவ்வப்போது கூறி வருகிறார். இந்த நிலையில் தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு கொடி விழாவில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ’2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக ஆட்சியை அமைக்கும் என்று கூறியுள்ளார்

பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு குறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். ஒரு ஆட்சியை எத்தனை பேர்தான் பிடிப்பார்கள் என்று அவர்கள் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web