நாளை மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

 
TNEB

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மின்தடை இருந்துவரும் நிலையில் நாளை மின் பராமரிப்பு காரணமாக சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது

மின் பராமரிப்பு காரணமாக சென்னையில் நாளை பெரம்பூர், வியாசர்பாடி, செம்பியம், அம்பத்தூர், அண்ணாசாலை, போரூர் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை நடைபெறும் என மின்சார துறை அறிவித்துள்ளது 

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை என்ற அறிவிப்பு பொது மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நாளை மின்தடை 3 மணி நேரம் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது சற்று நிம்மதியைத் தந்துள்ளது

From around the web