12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா? ரத்தா?

 
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா? ரத்தா?

தமிழகத்தில் பணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மே 3ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அந்த தேர்வு ஒத்தி வைக்கலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது சரியல்ல என்றும் இந்த தேர்வு ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் ராமதாஸ் உள்பட பலர் கூறி வருகின்றனர் 

exam

இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது

மேலும் பள்ளிக் கல்வித்துறையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை வேறு ஒரு தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

From around the web